ரஷ்யாவில் காதலியை கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட வாலிபர்

மாஸ்கோ:

ரஷ்யாவில் டிமிரிட்டி லிசின் (வயது 21) என்ற வாலிபரும், ஒலாகா புடுனோவா (வயது 45) என்றது பெண்ணும் காதலித்து வந்தனர். சீரியல் கில்லர்கள் மற்றும் மனிதர்களை கொன்று உடலை சாப்பிடும் சடங்குகளிலும் டிமிரிட்ட லிசினுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

சம்பவத்தன்று ஒலாகா வீட்டுக்கு சென்ற டிமிரிட்டி மது பாட்டிலால் அவரது தலையில் 25 முறை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளான். அதன் பின்னர் அவரது மூளையை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளான்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு டிமிரிட்டியை பிடித்து விசாரித்தனர். டிமிரட்டியின் செயல்பாடுகள் சைகோவை போல் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆயுள் கைதியாக டிமிரிட்டியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.