ரஷிய கொரோனா தடுப்பூசியால் எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லை! பிரபல உர நிறுவன சிஇஓ தகவல்…

மாஸ்கோ: ரஷியாவின் கொரோனா தடுப்பூசியால்எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லை என ரஷிய உரத்தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்து உள்ளார். தடுப்பூசி மனித சோதனைக்கு உட்படுத்தப்பட்டவரில் இவரும் ஒருவர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இதுவரை மூணரை  கோடி பேரை பாதித்துள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர். இறந்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் . இதற்கு மருந்து கண்டுபிடிக்க உலகமே போராடி வருகிறது .

பல நாடுகள் தடுப்பூசி சோதனைகளை நடத்தி வருகிறது. ரஷியாவில், புதிதாக உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதன் முடிவுகள் வெற்றிகரமாக இருப்பதாகவும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அடினோவைரஸ் என்ற வைரஸின் விகாரங்களை பயன்படுத்தி இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடினோவைரஸ் என்பது சாதாரண சளியை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் ஒரு வைரஸ். ஆனால், ஆயிரக்கணக்கான மனிதர்களை வைத்து 3ஆம் கட்ட பரிசோதனை செய்யப்படும் முன்பே இந்த தடுப்பூசிக்கு ரஷ்ய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பரிசோதனை முறை மிகவும் அவசியமானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷியாவும் கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் -V என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 11 அம் தேதி,  முதல் நாடாக ரஷ்யா அறிவித்தது.  ஆனால், உலக நாடுகள் ரஷியா மீது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில்,  மருந்தின் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக  ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். ஷ்யாவின் பிராந்திய பகுதிகளுக்கு விரைவில் இந்த மருந்துகளின் முதல் தொகுப்பு கிடைத்துவிடும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இருந்தாலும்,  ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.  ரஷியாவின் கொரோனா  தடுப்பூசி மனித சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், ஒருவரான கோடீஸ்வரரான பிரபல உர நிறுவனமான போஸ்அக்ரோ நிறுவனத்தின் சேர்மன் ஆண்ட்ரி குரியேவ், தனக்கு போடப்பட்ட தடுப்பூசியால் என்ன ஏற்பட்டது என்பத குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அதில், ஸ்புட்னிக் -V   கோவிட்19  தடுப்பூசி போட்டதால், தனக்கு எந்தவொரு பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். எ”தடுப்பூசிக்குப் பிறகு எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, ஏற்கனவே அதிக ஆன்டிபாடி அளவு தனக்கு போதுமான அளவு இருந்தது” என்றும் தெரிவித்து உள்ளார்.

“ஒரு தடுப்பூசி மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும், உலகப் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்து சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவும்” என்று கூறியவர், தடுப்பூசி மனதி சோதனை செய்துகொண்ட நாடுகளில், ரஷியாவே முதல்நாடு என்றும் பெருமிதம் கொண்டார்.

மேலும், . வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால், இனி பயப்படுதவற்கும், அதிர்ச்சி அடைவதற்கும் ஒன்றும் இல்லை என்று கூறியவர், அதை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டியதும் அவசியம் என்று தெரிவித்து உள்ளார்.

38 வயதான ஆண்ட்ரி குரியேவ், மற்றும் அவரது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அவரது 60 வயதான தந்தை, மற்றும் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள், தொழில்துறை மந்திரி டெனிஸ் மந்துரோவ் மற்றும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் ஆகியோரும் தடுப்பூசி மனித சோதனைக்கு தங்கள் உட்படுத்திக்கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.