பாகுபலி பற்றி ராஜமவுலியின் மாஸ்கோ பட விழா பேச்சு.. ரஷ்யா தூதரகம் கவுரவிப்பு..

ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப் படம் இரண்டு பாகமாக வெளியானது. இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ். அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன்,ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ். தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியானது.

 


பாகுபலி இரண்டு பாகமும் சேர்த்து ஒரே பாகமாக ரஷ்யா டிவியில் ஒளிபரப்பா கிறது. இந்த தகவலை ரஷ்ய தூதரகம் கடந்த 5ம் தேதி அறிவித்த நிலையில் தற்போது கடந்த 2017ம் ஆண்டு மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ராஜமவுலி பங்கேற்று பாகுபலி பற்றி பேசியபேச்சை மீண்டும் வெளியிட் டுள்ளது. ’இந்தியர்களின் டிஎன் ஏ வில் குடும்பம் என்ற பந்தம் ஊறி உள்ளது. சகோதரன், தாய், மகன், கணவன், மனைவி என உறவுகள் ஒன்றுக்கொன்று அர்ப்பணிப்புடன் செயல்படுவதும், இந்திய குடும்ப உறவுகளின் பிணைப்பை சொல்வதும் தான் பாகுபலி கதைக் கரு. அது நன்கு வரவேற்பு பெற்றது’ என ராஜ மவுலி பேசிய பேச்சை சுட்டிக்காட்டி யிருக்கும் தூதரகம் அந்த விழாவில் ராஜமவுலி பங்கேற்ற புகைப் படத்தையும் பகிர்ந்து கவுரப்படுத்தி உள்ளது.