அணு ஒப்பந்த விலகல் : டிரம்ப் முடிவை விமர்சிக்கும் முன்னாள் ரஷ்ய அதிபர்

மாஸ்கோ

ஷ்யாவுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்ததை முன்னாள் அதிபர் கோர்பசேவ் குறை கூறி உள்ளார்

ஈரான், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுடன் அமெரிக்கா அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தங்கள் போட்டிருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்கள் முன்பு ஈரான் உடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு அந்த நாட்டுக்கு பொருளாதார தடை விதித்தார். அத்துடன் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை ஈரானுடன் வர்த்தகம் செய்யக்கூடாது என மிரட்டல் விடுத்தார்.

சீனாவுடனான வர்த்தகப் போரின் காரணமாக சீனப்பொருட்களுக்கு இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். அதனால் சீனாவுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஒட்டி சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியது.

அவ்வகையில் ரஷ்யாவுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் சனிக்கிழமை அன்று அறிவித்தார். இதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கடனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னள் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் கோர்பசேவ், “ரஷ்யாவுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிககா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது ஒரு அறிவாளியின் செய்கை அல்ல. இந்த அணு ஆயுத ஒப்பந்தம் புவியில் உள்ள நாடுகளின் அமைதிக்காக போடப்பட்டதாகும். அதனால் இந்த ஒப்பந்தத்தி உள்ள அனைத்து விதிகளும் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்” என தெரிவித்தார்.

கடந்த 1987 ஆம் வருடம் கோர்பசேவ் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.