Random image

8 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை திருடிய ரஷ்ய ஹேக்கர் கைது

8 கோடி அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவலை திருடிய ரஷ்ய ஹேக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

hacker

ரஷ்யாவை சேர்ந்த ஆண்டிரி டையூரி என்ற ஹேக்கர் 8 கோடி அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜார்ஜியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஊடகங்கள் குறிப்பிடுகையில், “ அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இயங்கி வரும் JPMorgan Chase & Co என்ற வங்கியின் கணக்கில் உள்ள 8 கோடி வாடிக்கையாளர்களின் கணக்குகளு, தனிப்பட்ட தரவுகளும் திருடப்பட்டுள்ளன. ரஷ்யாவை சேர்ந்த ஆண்டிரி டையுரின் என்ற நபர் ஹேக் செய்து இந்த தகவல்களை திருடி உள்ளார்.

இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆண்டரி மீதான நீதிமன்ற விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஆண்டரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை விதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.