Random image

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம் – தேடுதல் பணி தீவிரம்

ரஷ்யாவை சேர்ந்த போர் விமானம் ஒன்று சிரியாவில் மாயமாகி உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தில் 14 வீரர்கள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

russian

ரஷ்யாவின் போர் விமானமான Russian Il-20 14 வீரர்களை ஏற்றிக் கொண்டு சிரியாவில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் விமானம் சென்றுக் கொண்டிருந்த போது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் கூறுகையில், ” ரஷ்யாவின் போர் விமானமான Russian Il-20, 14 வீரர்களை ஏற்றிக் கொண்டு சிரியாவில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35கி.மீ. தொலைவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் விமானம் வந்த போது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரமான நடந்து வருகிறது “ என்று தெரிவிக்கப்பட்டது.

போர் விமானம் பிற நாட்டினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதா ? என்ற கோணத்தில் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, ரஷ்ய விமானத்தை தாங்கம் தாக்கவில்லை என அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் சிரிய அரசுப்படையுடன், ரஷ்யா போர் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.