அமெரிக்க நீதிமன்றம் அதிரடி: ரஷ்ய எம்.பி. மகனுக்கு 27ஆண்டு சிறை!

--

வாஷிங்டன்,
கிரெடிட் கார்டு தகவல்களை திருடியதாக ரஷ்ய எம்.பி. ஒருவரின் மகனுக்கு, அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் வாலரி சீலிஸ்னெவ் (Valery Seleznev) என்பவரது மகன் ரோமன். இவர் அமெரிக்க நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து, வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை திருடியதாக கூறப்பட்டது.

மேலும், திருடப்பட்ட, கிரெடிட் கார்டு தகவல்களைத் விர்ஜினியா, உக்ரைன் போன்ற மற்ற நாடுகளைச் சேர்ந்த இணையதளங்களுக்கு விற்பனை செய்ததும், அதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு 169 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

ரஷ்ய எம்.பி. வாலரி சீலிஸ்னெவ்

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், ரோமனுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய எம்.பி. வாலரி சீலிஸ்னெவ், தனது மகன் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.