ரஷ்ய விமான விபத்தில் 71 பேர் பலி

மாஸ்கோ:

ரஷ்யாவில் நடுவானில் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 71 பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

 

மாஸ்கோ டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 65 பயணிகள், 6 ஊழியர்கள் என 71 பேருடன் இன்று புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடிரென விமான நொறுங்கி விழுந்தது.

இந்த விமான விபத்தில் அதில் இருந்த அனைவரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று அஞ்சப்படுகிறது. விமான நொறுங்கி விழுந்த இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். உயிருடன் யாரும் இருக்கிறார்களா? என்று தேடும் பணி நடக்கிறது. விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி