மாஸ்கோ

ஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவை சேர்ந்த நல்லெண்ண தூதர்கள் 755 பேர் இன்று முதல் வெளியேற்றப்ப்டுவர்கள் என அறிவித்துள்ளார்.

முன்னதாக ரஷ்ய மந்திரிசபை, அமெரிக்க தூதரகத்தில் உள்ள நல்லெண்ணத் தூதர்களின் எண்ணிக்கையை 455 ஆக குறைக்க வேண்டும் என அறிவித்திருந்தது.  அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் உள்ள தூதர்களின் எண்ணிக்கை 455 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று ரஷ்யா 1 தொலைக்காட்சியில் உரையாற்றிய புடின், “ரஷ்யா வெகுநாட்களாக அமெரிக்க உறவை மேம்படுத்த தயாராக இருந்தது.  ஆனால் அமெரிக்காவின் பக்கத்தில் இருந்து சரியான நடவடிக்கை இல்லை.  நாங்களும் இத்தனை நாள் பொறுமை காத்திருந்தோம்.  ஆனால் இப்போது பொறுமையின் எல்லை மீறி விட்டது.  இதன் காரணமாக 755 தூதர்கள் வரும் செப்டம்பர் 1 முதல் வெளியேற்றப் படுவார்கள்” என தெரிவித்தார்.

வெளியேற்றப் படும் தூதர்களுக்கு ரஷ்யாவில் உள்ள அனைத்துச் சொத்துக்களும் அரசால் கைப்பற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது.  தூதரகம் இந்த் சொத்துக்களை செப்டம்பர் 1 அன்று அரசிடம் தரவேண்டும் என உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர், செர்காய் ரியப்கோவ், “அமெரிக்காவின் பக்கம் இருந்து இன்னும் மோசமான விளைவுகள் இதற்காக நடை பெற்றாலும் அதை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்,  அதற்கான பதிலடியும் உடனே கொடுக்கப்படும்.  நாங்கள் கண்னாடி போன்றவர்கள்.  எங்களுக்கு நடப்பதை நாங்கள் எதிரொளிக்கிறோம்” என்றார்.