அக்., 4, 5ம் தேதிகளில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவில் சுற்றுப் பயணம்

டில்லி:

வரும் அக்டோபர் 4,5ம் தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமின் புடின் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா-&ரஷ்யா இடையிலான நட்பு பாதிக்கப்படும் சூழல் நிலவியது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதால் இந்தியா மீதும்ª பொருளாதார தடை விதிக்க முடியும். அதனால் ரஷ்யாவுடன் நட்பை இந்தியா கைவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என்றும், இருநாட்டு நட்பு தொடரும் எனவும் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வரும் அக்டோபர் 4, 5ம் தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து புடின் பேசுவார் என்று கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி