ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு 

மாஸ்கோ:

ஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2,31,310 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 972 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்து 286 ஆகவும் உயர்ந்துள்ளது.

இது குறித்து ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கூறுகையில், கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி