திருவண்ணாமலை : வழி தவறிய ரஷ்ய பயணி மீட்பு

திருவண்ணாமலை

கா தீபம் ஏற்றப்படும் தீபமலையில் வழி தெரியாமல் தவித்த ரஷ்ய பயணி இரு தினங்களுக்குப் பின் நேற்று மீட்கப்பட்டார்.

ரஷ்ய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.   இவ்வாறு சுற்றுலா வரும் பல பயணிகள் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவது வழக்கமாகி வருகிறது.   தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிக தலங்களில் முக்கியமான தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும்.  இங்கு பல சித்தர்கள் அரூபமாக உலவுவதாக ஆன்மிக வாதிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய நாட்டில் இருந்து சுற்றுப்பயணம் வந்த அலெக்சாண்டர் என்பவர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.   கார்த்திகை தீபம் அன்று தீபம் ஏற்றப்படும் தீப மலை உச்சிக்கு இவர் தனியாக சென்றுள்ளார்.   அங்கு வழிபட்டு விட்டு கீழே இறங்கும் போது வழி தவறி விட்டார்.    கிட்டத்தட்ட பல மணி நேரம் வழி தெரியாமல் தவித்த அவர் காவல்த்துறை உதவி என்ணான 100 மூலம் புகார் அளித்துள்ளார்.

சனிக்கிழமை அன்று அவரை தேடும் பணி தொடங்கியது.   அவருடைய மொபைல் சார்ஜ் தீர்ந்ததால் ஆஃப் ஆகி விட்டது.   அதனால் அவர் இருகும் இடத்தை கண்டறிய முடியவில்லை.   ஆகையால் நேற்று மீண்டும் அவரை தேடிச் சென்ற காவலர்கள் மாலை அவரை கண்டுபிடித்தனர்.   மிகவும் சோர்வுடன் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.