வாஷிங்டன்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இருந்து  ஏராளமான முகக்கவசங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ள ஒரு ரஷ்ய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வணிக தினசரி தெரிவித்துள்ளது.

யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசியில் பேசியதை அடுத்து, வென்டிலேட்டர்களை ஏற்றிச் செல்லும் ரஷ்ய ராணுவ விமானம், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பிற மருத்துவ பொருட்களுடன் நியூயார்க்கில் தரையிறங்கியது.

மாஸ்கோவிற்கு கிழக்கே 1,500 கிமீ தொலைவில் உள்ள செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள ஒரு ஆலை தயாரித்துள்ளது. இந்த அவென்டா-எம் ரக வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் அந்த ஆலையானது கேஆர்இடி என்றழைக்கப்படும் ஒரு நிறுவனத்தின் கிளையாகும்.

இந்த கேஆர்இடி என்ற நிறுவனம்,  ஜூலை 2014 முதல் அமெரிக்க  பொருளாதார தடைகளின் கீழ் உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நாட்டினருடன் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து வழங்குவதை போலவே, பொருட்கள் மற்றும் உபகரணங்களை நேரடியாக வாங்குகிறது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் சில கடன் மற்றும் பங்கு தொடர்பான துறைசார் தடைகளுக்கு உட்பட்டது.

இது மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கான பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிரிமியாவை உக்ரேனிலிருந்து இணைத்ததற்காகவும், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்ததற்காகவும் அமெரிக்கா 2014ம் ஆண்டில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது என்பது  குறிப்பிடத்தக்கது.