வெளிநாட்டவருடன் உடல் உறவு வேண்டாம் : ரஷ்ய பெண் எம் பி வேண்டுகோள்

மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண வரும் வெளிநாட்டவர்களோடு உடல் உறவு கொள்ள வேண்டாம் என ரஷ்யப் பெண் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 1980ஆம் வருடம் ரஷ்யாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.   அப்போது ஏராளமான வெளிநாட்டவர் ரஷ்யாவுக்கு வந்தனர்.   அங்குள்ள ரஷ்யப் பெண்களிடம் அவர்கள் நெருக்கமாக பழகியதில் பல  பெண்கள் கர்ப்பமாகி தகப்பன் இல்லாத குழந்தைக்கு தாயானார்கள்.

தற்போது ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.   இது குறித்து ரஷ்யாவின் பெண் பாராளுமன்ற உறுப்பினரான டமாரா என்பவர் மாஸ்கோ ரேடியோ நிலயத்தில் உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த பிறகு ரஷ்யாவில் அமெரிக்கா,ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாட்டின கலப்புக் குழந்தைகள் ஏராளமாக பிறந்தன.   இதில் பல குழந்தைகள் கைவிடபட்டு அனாதைகள் ஆகின.

இவ்வாறு குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்படுவதால் சமுதாயமே பாதிப்புக்கு உள்ளாகிறது.  எனவே உலகக் கோப்பை போட்டிகளை காண வரும் வெளிநாட்டினருடன் ரஷ்யப் பெண்கள் தயவு செய்து உடலுறவு கொள்ள வேண்டாம். “ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.