மாஸ்கோ:

ரஷ்யாவில் மார்ச் 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான தீர்மானம் ரஷ்ய நாடாளுமன்ற மேலவையில் இது தொடர்பான தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக புடின் சமீபத்தில் அறிவித்திருந்தார். சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக நேற்று முன் தினம் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார்4வது முறையாக அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புடினைத் தவிர 20க்கும் மேற்பட்டவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கென்னடி ஸியுகனோவ் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் 1998, 2000, 2008, 2012ம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

லிபரல் டெமோக்ராடிக் கட்சி சார்பில் விளாதிமீர் ஸிரினோவ்ஸ்கி போட்டியிடுகிறார். ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி வரும் அலெக்ஸேய் நவால்னி அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். விளாடிமீர் புடின் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வருகிறார். இடையில் 2008ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.