உலக சாதனை அதிக பெண் பாராளுமன்ற உறுபினர்களை கொண்ட ஆப்பிரிக்க நாடு

கிகாலி, ரவாண்டா

ப்பிரிக்க நாடான ரவாண்டா நாட்டு பாராளுமன்றத்தில் பெண்கள் எண்ணிக்கை 67.5% ஆகி உலக சாதனை ந்டத்தி உள்ளது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகள் அமைந்துள்ளன. இந்த நாடுகளில் ஒன்று ரவாண்டா நாடாகும். இந்த நாட்டின் தலைநகர் கிகாலி ஆகும். இந்த நாட்டு பாராளுமன்றத்தில் மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

இந்த நாட்டின் அதிபர் காகாமே என்பவர். சமீபத்தில் இந்த நாட்டில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காகமேவின் கட்சி அதிக இடங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.
தர்போது இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களாக 54 பெண்கள் உள்ளனர். இது மொத்த உறுப்பினர்களில் 67.5% ஆகும். இதற்கு முன்பு இந்த நாட்டில் 64% பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

தற்போது எண்ணிக்கை உயர்ந்து 67.5% ஆகியதால் இந்நாடு உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தனது சாதனையை தானே முறியடித்துள்ள நாடாக ரவாண்டா உள்ளது.