இயக்குனர் பெயரில் மோசடி.. சைபர் கிரைமில் புகார்..

கார்த்திகேயா. பாயல் ராஜ்புத் நடித்த ‘ஆர்.எக்ஸ் 100’ என்ற தெலுங்கு வெற்றி படத்தை இயக்கிய அஜய் பூபதி பெயரில் மோசடி முயற்சி நடந்துள்ளது. என்ன மோசடி அவரே விளக்கி உள்ளார்.
’ஆர் எக்ஸ் 100 படம் இயக்கினேன் அடுத்த படம் இயக்குவதற்காக காத்திருக்கிறேன். இதற்கிடையில் யாரோ என் பெயரை பயன்படுத்தி நெட்டில் போன் நம்பருடன் விளம்பரம் கொடுத் திருக்கிறர்கள். அதாவது எனது படத்துக்கு ஆடிஷன் நடப்பதாகவும் நடிக்க விரும்பும் ஆண். பெண் ஆடிஷனுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கபட்டிருக் கிறது.

 

 

நான் அப்படி எந்த விளம்பரமும் தரவில்லை. என் பெயரை பயன்படுத்தி யாரோ மோசடி செய்யப்பார்க்கிறார்கள். இந்த மோசடி குறித்து நான் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறேன். நான் அறிவித்தால் அதை அதிகார பூர்வ தளத்தில்தான் அறிவிப்பேன். போலி விளம்பரத்தை கண்டு பெண்கள் யாரும் ஏமாற வேண்டாம்’ என தெரிவித்திருக் கிறார்.