பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டார் என பரவிய வதந்தி….!

பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாக நேற்று செய்தி பரவிய நிலையில் அது வதந்தி என குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக சினிமா துறையில் முன்னணி பாடகியாக வலம் வந்த அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் தான் இனி பாடப் போவதில்லை என ஓய்வை அறிவித்தார்.

 

நேற்று எஸ் ஜானகி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என ஒரு செய்தி மிக வேகமாக சமூக வலைதளத்தில் பரவியது.

ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இது முற்றிலும் வதந்தி என விளக்கம் கொடுத்திருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் கூட ஒரு சிறிய அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

அறுவை சிகிச்சைக்கு பின் ஜானகி அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளியாகி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜானகியின் மகன் ஊடகங்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.