பெங்களூரு,

முன்னாள் கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா பாரதியஜனதாவில் ஐக்கியமாகி உள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்த, முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் மாநில மற்றும் மத்திய தலைமைகள் தன்னை ஒதுக்கி வைப்பதாக ஜனவரி மாதம் கூறி கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பினார்.

ஏற்கனவே சில ஆண்டுகளாக கட்சியில் பணியில் இருந்து ஒதுங்கி இருந்த கிருஷ்ணா, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாரதியஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து தன்னை, பாரதியஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். அவருக்கு அமித்ஷா பூங்கொத்து கொடுத்து கட்சிக்கு வரவேற்றார்.

இந்நிலையில், கிருஷ்ணா பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து காங்கிரஸ் தலைமை விமர்சித்துள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணா  கடந்த சில ஆண்டுகளாக எஸ்.எம்.கிருஷ்ணா கட்சி பணிகளில் இருந்து விலகியே இருந்தார். கட்சி அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தது. தனது பேராசை களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சி மாறுபவர்களை யாரும் தடுக்க முடியாது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எல்.புனியா  தெரிவித்துள்ளார்.

ஆனால், பா.ஜ. தலைவர் அமித்ஷாவோ, கிருஷ்ணா சரியான நேரத்தில் முடிவு எடுத்துள்ளார் என்றும், மோடி பிரதமராக வந்தது முதல் நாட்டில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாற்று கட்சியினரும் பா.ஜ.கவில் இணைந்து வருவது அதிகரித்து உள்ளது. கிருஷ்ணா பா.ஜ.வில் இருப்பதால், கர்நாடகவில் பாரதியஜனதா கட்சி மேலும் பலம்பெற்றுள்ளது என்று கூறினார்.

அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், கிருஷ்ணா பா.ஜ.கவில் இணைந்தது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.