5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது: தென்கொரியா அரசு

சியோல்:
சியோலில் ஐந்து பேருக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் தலைநகரான சீயோலில் கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்காக ஐந்து பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே இடத்தில் கூட கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோலை சுற்றி உள்ள கியோங்கி மாகாணம் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்ஜியோன் ஆகிய இடங்களிலும் கட்டாயம் இந்த விதி முறையை கடைபிடிக்க வேண்டும் என்று தென்கொரியா தலைநகரின் நகராட்சி அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு மட்டும் 50 பேர் வரை அனுமதிக்கலாம் என்றும், அவர்களும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென்கொரியாவில் 962 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் தென்கொரியாவில் மொத்தமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50, 591 ஆக அதிகரித்துள்ளது.

You may have missed