சென்னை:

பெண் பத்திரிகையாளர் குறித்து  பிரபல நகைச்சுவை நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் கீழ்த்தரமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து அதை நீக்கியுள்ளார். இந்நிலையில், எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி இன்று மாலை 3 மணிக்கு பாஜக தலைமையகமான கமலாலயத்தை பத்திரிகையாளர்கள் முற்றுகையிடுகிறார்கள்.

தமிழகத்தில் நிலவி வரும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், கவர்னர் கன்னத்தில் தட்டியது, கனிமொழி குறித்த எச்.ராஜாவின் பதிவு போன்றவற்றின் காரணமாக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், நடிகர் மற்றும் அரசியல்வாதி எஸ்.வி.சேகர், கவர்னர்மீது பெண் பத்திரிகையாளர் கூறிய புகார் காரணமாக,  ஊடகவியலாளர்களை பற்றி மிகவும் கீழ்தரமான ஒரு பதிவினை  தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு அதனை நீக்கியுள்ளார்.

இது பத்திரிகையாளர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, எஸ்.வி.சேகர்  பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள்  முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இதன் காரணமாக இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள பாஜக  தலைமை அலுவலகத்தை செய்தியாளர்கள் முற்றுகையிடு கின்றனர்.