பின்வாசல் வழியாக பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜரானார் எஸ்வி சேகர்

சென்னை:

வதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் கைவிட்டுவிட்ட நிலையில், இன்று எழும்பூர் கோர்ட்டில் பலத்த பாதுகாப்புடன் பின்வாசல் வழியாக எஸ்.வி.சேகர் ஆஜர் ஆனார்.

இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் ஏராளான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக முகநூலில் பதிவிட்டது தொடர்பான அவதூறு  வழக்கில் கடந்த 2 மாதங்களாக காவலர்கள் முன்னிலையில்  தலைமறைவாக இருந்து வந்த நகைச்சுவை நடிகர்  எஸ்வி சேகர் இன்று எழும்பூர் நீதி மன்றத்தில் பின்புற வாசல் வழியாக வந்து  ஆஜரானார்.

பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஜூன் 20ம் தேதி (இன்று) ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதற்கு தடை கேட்டு உச்சநீதி மன்றத்தை நாடினார் எஸ்.வி.சேகர். ஆனால், உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெறும்படி அறிவுறுத்தி, முன்ஜாமின் கொடுக்க முடியாது என்று கைவிரித்து விட்டது.

இந்த இக்கட்டமான சூழலில், எஸ்.வி.சேகர் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து எஸ்வி சேகர் இன்று  இன்று காலை 10 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.   எஸ்.வி.சேகர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.