சென்னை:  தமிழக பாஜக உறுப்பினரும் காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்பு சட்டத்தின் கீழும்,  தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாகவும்   வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

தேசியக் கொடியை அவமதித்ததற்காகவும், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காகவும் பாஜக அரசியல்வாதி எஸ்.வி.சேகர் மீது சென்னை நகர போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் கொடுத்துள்ள புகார் மனுவில்,  எஸ்.வி.சேகர் முதல்வர்  குறித்து மோசனமான வகையில் விமர்சித்ததாவும், தேசியக்கொடி குறித்து முதல்வர்  கூறிய கருத்தை  அவமதித்து, தேசியக் கொடியின் வண்ணங்களை தவறாகப் புரிந்துகொண்டு, தமிழகத்தில் வகுப்புவாத மற்றும் அரசியல் வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன் தனது சொந்த விளக்கத்தை அளித்தார்.

இதன் காரணமாக, எஸ்.வி.சேகர் மீது  ஐகிசி  124 ஏ, 153 பி மற்றும் தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 இன் பிரிவு 2 இன் கீழ் பதிவு செய்ய  வலியுறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய தேசியக்கொடி குறித்து விளக்கம் அளித்தார். அப்போது,  தேசியக் கொடியில், மேல் பகுதியில் உள்ள  குங்குமப்பூ நிறமானது,  நாட்டின் வலிமையையும் தைரியத்தையும் குறிக்கிறது. நடுத்தர  பகுதியில் தர்ம சக்கரம் உடன்   உள்ள வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது. பச்சை நிறத்தில் உள்ள கீழ்பகுதியானது,  கருவுறுதல், வளர்ச்சி மற்றும் புனிதத்தன்மையைக் காட்டுகிறது என்று கூறியிருந்தார்.

ஆனால், முதல்வரின் விளக்கம் குறித்து விமர்சித்து  வீடியோ வெளியிட்ட  எஸ்.வி.சேகர், தேசியக் கொடியில் குங்குமப்பூ நிறம் இந்துக்களையும், வெள்ளை நிறம் கிறிஸ்தவர்களையும், பச்சை நிறம் முஸ்லிம்களையும் குறிக்கிறது என்று கூறுகிறது என்று தெரிவித்திருந்தார்.

எஸ்.வி.சேகரின் விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய தவறான விளக்கங்களுடன் அவர் முதல்வரைப் பற்றி வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.