எஸ்.வி.சேகர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்: அமைச்சர் மா.பா.

சென்னை:

வதூறு வழக்கில் காவல்துறையால்  தேடப்பட்டு வருவதாக கூறப்படும்   நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் 20ந்தேதி (நாளை) நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து  அவதூறாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில், எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.

ஆனால், அவரோ மத்திய மாநில அமைச்சர்களின் இல்ல விழாக்களில் போலீசார் முன்னிலையில் நடமாடி வருகிறார். அவரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க முன்வராதது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதி மன்றமும், சென்னை உயர்நீதி மன்றமும் தடை விதிக்க மறுத்து உத்தரவிட்ட நிலையிலும் அவரை கைது செய்ய தமிழக காவல்துறையினர் தயாராக இல்லை. இந்த நிலையில் அவர்மீது தொடரப்பட்ட வழக்கில், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக எழும்பூர் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

எஸ்.வி.சேகர்

இந்த பரபரப்பான நிலையில், நாளை எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வருவாரா என்று கேள்வி எழும்பி உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து  தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், எஸ்.வி.சேகர் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப் படுவார் என்று கூறினார்.