சாஹோவின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன்….!

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் ஷ்ரத்தா கபூர் , ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுஜீத் எழுதி இயக்கியுள்ள இந்த படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது . தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் நேற்று திரைக்கு வந்தது.

படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் பெரிதாக வரவில்லையென்றாலும் , முதல் நாள் வசூலில் படம் கொடி கட்டிப் பறந்தது . இந்தப்படம் இந்தியில் மட்டும் முதல் நாளில் 24.40 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-ம் ஆண்டு வெளியான இந்தி படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது சாஹோ. முதல் நாளில் ரூ.42.30 கோடி வசூல் செய்த சல்மான் கானின் பாரத் திரைப்படம் முதலிடத்திலும், ரூ.29.16 கோடி வசூல் செய்த அகஷய் குமாரின் மிஷன் மங்கள் திரைப்படம் 2-வது இடத்திலும் உள்ளது.