படத்தைத் திருடினால் ஒழுங்காக திருடுங்களேன் என்று கிண்டலடிக்கும் ஜெரோம் சாலே…!

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் ஷ்ரத்தா கபூர் , ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுஜீத் எழுதி இயக்கியுள்ள இந்த படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது . தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் திரைக்கு வந்தது.

படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் பெரிதாக வரவில்லையென்றால், முதல் நாள் வசூலில் படம் கொடி கட்டிப் பறந்தது . இந்தப்படம் இந்தியில் மட்டும் முதல் நாளில் 24.40 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தனது படத்தை சாஹோ பட இயக்குநர் காப்பி அடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டினை பிரெஞ்சு த்ரில்லர் பட இயக்குநர் ஜெரோம் சாலே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2008-ம் ஆண்டு வெளியான லார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்தின் இரண்டாவது ‘ஃப்ரீமேக்’ தான் சாஹோ. முதலாவதைப் போலவே மோசமானது. எனவே தெலுங்கு இயக்குநர்களே நீங்கள் எனது படத்தைத் திருடினால் குறைந்தபட்சம் அதைச் சரியாகச் செய்யலாம் இல்லையா” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி