சாஹோ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ….!

பிரபாஸ் நடிப்பில் ,சுஜீத் இயக்கும் படம் சாஹோ . இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர் .

ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டியில் உள்ள இரண்டு imax தியேட்டர்களில் , லயன் கிங் ஓடி கொண்டிருப்பார்த்தால் கூட தேதி மாற்றத்துக்கான காரணாமாக இருக்கலாம் என கூறப்படுகிறது .

கார்ட்டூன் கேலரி