பாக்ஸ் ஆபிஸ் ஹிட்: சிவகார்த்திகேயனின் சீமராசாவை பின்னுக்கு தள்ளிய ‘சாமி 2’!

சென்னை:’

மீபத்தில் வெளியான சாமி-2 படம் சிவகார்த்திகேயனின் சீமராசாவை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் முதலிடத்தை பிடித்து உள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘சாமி 2’. இந்தப் படத்தில் விக்ரம், தந்தை மகன் என இரு வேடங்களில் நடிததுள்ளார். தந்தைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாகவும், மகனுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

இருந்தாலும் படம் வெளியான 3 நாட்களில் வசூல் சக்கை போடு போட்டுள்ளது.  முதல் மூன்று நாளில் ‘சாமி- 2’ படம் 285 காட்சிகள் ஓடி… ரூ. 1.90 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். மேலும்,  துபாயில் ரூ.3 கோடி, மலேசியாவில் ரூ. 3 கோடி என ரூ.8 கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளதாம்.

அதேவேளையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம், 225 காட்சிகள் மட்டும் ஓடி, ரூ.72.26 லட்சங்களை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 11 நாட்கள் ஓடிய நிலையில் இதுவரை 5.27 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபேளையில் ஹாலிவுட் படமான ஈகுலைஷர்-2 படம் 4வது இடத்தில் உள்ளது. இது 63 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் ரூ.30.23 லட்சம் வசூல் செய்துள்ளது.

ராஜா ரங்குஷ்கி என்ற தமிழ்படம், 60 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் 11.24 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது.

அதைத்தொடர்ந்து நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம் 4வது வாராக ஓடி வருகிறது. இது கடந்த வாரத்தில் 66 காட்சிகள் திரையிடப்பட்டுள்ள நிலையில், ரூ.5.45 கோடி வசூல் செய்தும் சாதனை படைத்துள்ளது.

அதைத்தொடர்ந்து தாப்ஸி பொன்னு மன்மரியாழ் என்ற படம் 18 கட்சிகள் வெளியிடப்பட்டு, ரூ.4.51 லட்சமும், இதுவரை ரூ.26.21 லட்சமும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி