வெளியானது ‘சாணிக் காயிதம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.

யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . சிவம் சி. கபிலன் இந்த போஸ்டரை வடிவமைத்துள்ளார்.