சாத்தான்குளம் பயங்கரம், நடிகை காஜல் அகர்வால் கடும் கண்டனம்.. கடுமையான தண்டனை தேவை..

சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சிறையில் வைத்து அடித்துகொன்ற சம்பவத்தில் போலீஸாருக்கு கடுமையான தண்டனை தர கேட்டிருக்கிறார் பிரபல நடிகை ​நடிகை காஜல். அகர்வால்.


இந்த சம்பவம் குறித்து காஜல் அகர்வால் தனது இணைய தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இது சகிக்கமுடியாதது. ஒரு சமூகமாக நாம் எப்படி அமைதியாக இருகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜெயராஜ் அண்ட் ஃபெனிக்ஸ் மரணத்துக்கு இப்போது நாம் குரல் எழுப்ப வேண்டும். அவர்களது உயிருக்கு நியாயம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தின் துக்கத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார் காஜல்.
இந்த சம்பவம் குறித்து பாடகி சுசித்ராவின் வீடியோவை மேற்கோள் காட்டி, “இந்த முழு வீடியோவையும் என்னால் கேட்க முடியவில்லை. கோரமான மற்றும் கொடூரமான. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு ஒரு இடமாற்றத்தை விட கடுமையான தண்டனை தேவைப்படுகிறது’ என வலியுறுத்தினார் காஜல் அகர்வால்.