சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தியதை தொடர்ந்து கேரளாவில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராடத்தில் பத்திரிகையாளார் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் இறந்தது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

bjp

சபரிமலை வழிபாட்டிற்கு பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து சபரி மலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் ஆண் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் போராட்டமும் அவ்வபோது நடைபெற்றது. இந்நிலையில், வரலாற்றில் முதல் முறையாக நேற்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிந்து அம்மனி மற்றும் கனக துர்கா என்ற இரு பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றில் இருந்து கேரளாவில் போராட்டம் வலுத்து வருகிறது. இன்று கேரளா முழுவதும் கடையடைப்பு மற்றும் அரசு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கன்னூர், மஹாத்மாகாந்தி, கேலிகட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

சபரிமலைக்கு பெண்களை அழைத்து சென்ற கேரள அரசை கண்டித்து சங்க் பரிவார், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது 38 போலீசார், பத்திரியாளர் உட்பட 100 பேர் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மாநில காங்கிரஸ் கட்சி அமைப்பான யூடிஎஃப் பெண்களின் உரிமைக்கு மறுப்பு தெரிவித்த இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுசரிப்பதாக கூறியுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தின் போது ஏற்பட்ட கூச்சல், குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளுவினால் பாஜக தொண்டர்கள் மீது கத்து குத்தி நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பந்தளம், கோழிக்கோடு பகுதிகளில் வீடுகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகையை வீசித் கட்டுப்படுத்த முயற்சித்தனர். போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 வயதான சமூக ஆர்வலர் ஒருவர் கல்லடிப்பட்டு காலமானார். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தனிக்குழுவை அமைத்து மாநில டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “ உண்மையான ஐயப்ப பக்தர்கள் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை ஏற்றுக்கொள்கின்றனர். பாஜக வின் தூண்டுதல் பேரில் செயல்படும் அமைப்புகள் தான் போடாட்டம் நடத்தி வருகின்றன. பாஜக இதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. வேண்டுமேன்றே உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசியல் செய்கிறது” என்றார்.