மாசிமாத பூசைக்காக 12-ந்தேதி நடை திறப்பு: அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

பம்பா:

பரிமலை அய்யப்பன் கோவில் நடை  மாசி மாத பூஜைக்காக வரும்12-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி  அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை  எதிர்த்து மாநிலத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.  இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில்  தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்  விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கப்பட உள்ளது. 12ந்தேதி முதல் 17ந்தேதி வரை நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்க கடுமையான கட்டுப்பாடுகளை  பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விதித்துள்ளார்.

காலை 10 மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள் என்றும்,  சபரிமலைக்கு பெண்கள் வருவது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால்   பக்தர்கள் அமைதியாக சென்று வழிபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.