பம்பா:

நாளை மாசி மாதம் பிறப்பதையொட்டி, சபரி அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.  இதையொட்டி  அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு உள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பின் எதிரொலியாக சபரிமலைக்கு இளம்பெண்கள் வர முயற்சித்ததை தொடர்ந்து,  மாநிலத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது. பல இடங்களில் வன்முறையும் நிகழ்ந்தது. இதையொட்டி பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.

இதற்கிடையில் உச்சநீதி மன்றத்தில்  தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்  விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை  திறக்கப்பட உள்ளது.  சபரிமலை மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி கோவில் நடையை  திறந்து வைக்கிறார். தொடர்ந்து 17-ந்தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

மாசி மாத பூஜையின் போதும் சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக  எஸ்.பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சன்னிதானத்தில் எஸ்.பி. அஜீத் தலைமையிலும், பம்பையில் எஸ்.பி. மஞ்சு நாத் தலைமையிலும், நிலக்கல்லில் எஸ்.பி. மது தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

12ந்தேதி முதல் 17ந்தேதி வரை நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்க கடுமையான கட்டுப்பாடுகளை  பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விதித்துள்ளார்.