சபரிமலை கோவில் வழக்கு முதல்முறையல்ல: 1986ம் ஆண்டே கோவிலுக்கு சென்ற பெண்கள் மீது தொடரப்பட்ட வழக்கு

சபரிமலை கோயிலில் சினிமா ஷூட்டிங் எடுப்பதற்கு கூட பெண்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. திரைப்படத்தின் ஷூட்டிங் எடுப்பதற்கு கோயிலில் பெண்களை அனுமதி வழங்கியதற்காக 1986ம் ஆண்டே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

24

தற்போது சமரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பிரச்சனை வலுவடைந்து வருகிறது. கோயில் நிர்வாகமும், இந்து அமைப்புகள் காலங்காலமாக கடைப்பிடித்துவரும் முறையை மாற்றமுடியாது என்று கூறி மறுத்து வருகின்றன.

பல்வேறு பரபரப்புகளிடையே இன்று கோயில் நடை திறக்கப்பட்டது. கோயிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது எனக் கூறி இந்து அமைப்புகள் போரட்டம் நடத்தியதில் கலவரம் வெடித்தது. ஆனால், இதற்கு முன்பே 1986ல் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

1986ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘ நம்பினோர் கைவிடுவதில்லை ‘ என்ற ஆன்மீக திரைப்படத்திற்கு ஏராளமான பெண் நடன கலைஞர்கள் சபரிமலை கோவிலில் நடனமாடினர். பெண்கள் கோவிலில் நடனமாடியதை கண்டித்த தேவஸ்தானம் அவர்களுக்கு அபராதமும் விதித்தது. அதன்பிறகு அந்த திரைப்படத்தை இயக்கிய கே. சங்கரன் மார்ச் 8 முதல் 13ம் தேதி வரை கோவிலில் ஷூட்டிங் எடுக்க நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார்.

3

அதன்பிறகு காயன்குளம் அருகே கிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளில் இளம் பெண்கள் நடனமாடியதாக வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் ஜெயஸ்ரீ, சுதா சந்திரன், அனுபாமா, வடிவுக்கரசி மற்றும் மனோரமா உள்ளிட்ட நடிகைகள் குற்றவாளிகளாக கூறப்பட்டன. மேலும் படத்தயாரிப்பாளர் சங்கரன் 6வது குற்றவாளியாகவும், தேவஸ்தான நிர்வாகத்தின் தலைவர் என்.பாஸ்கரன் 7வது குற்றவாளியாகவும் வழக்கில் கூறப்பட்டனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் 1986ம் ஆண்டு ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகளாக கூறப்பட்ட நடிகைகள் செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் பிள்ளை குற்றாவாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வழக்கில் மனோரமா மட்டும் விடுவிக்கப்பட்டார். ஏனெனில் அப்போது அவருக்கு வயது 50.

4556

திரைப்பட ஷீட்டிங்கிற்கு அனுமதி அளித்த தேவஸ்தானத்திற்கு ரூ.7500 அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்பதை கோவில் நிர்வாகம் கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்தது.

அதன்பிறகும் தேவஸ்தானத்தை சேர்ந்த ஒருவரின் மகள் கோவிலுக்கு சென்றதால் இந்த வழக்கு மீண்டும் கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிபூர்ணன் 10 வயது முதல் 50 வயதிலான பெண்களை கட்டாயமாக கோவிலுள் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டர்.

அதிலிருந்து சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வது தடையாக்கப்பட்டது. தற்போது அந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.