சபரிமலை சுற்றுலாத்தலம் அல்ல: கேரள காங்.தலைவர் ரமேஷ் சென்னிதாலா

பம்பா:

பரிமலை சுற்றுலாத்தலம் அல்ல என்று கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரும்,  கேரள காங்.தலைவருமேன ரமேஷ் சென்னிதாலா கூறினார்.

கேரள காங். தலைவர் ரமேஷ் சென்னிதாலா

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக, கேரள மக்களின் எதிர்ப்பை மீறி பெண்கள் சிலர் சபரிமலைக்கு செல்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் உள்பட சில பெண்கள் சபரிமலை செல்வதாக கூறி பாதி வழி சென்ற நிலை யில், அய்யப்ப பக்தர்கள் போராட்டம் காரணமாக திரும்பி வந்தனர். இந்த நிலையில்,  இன்று கவிதா என்ற பெண் பத்திரிகையாளர் மற்றும் ரஹானா பாத்திமா என்ற சமூக செயற்பாட்டாளரும், சுமார் 150 காவல் துறையினர் பாதுகாப்புடன் சபரிமலை நோக்கி வந்தனர். சன்னிதானத்திற்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில், அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்ப்பு காணமாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து உள்ளே நுழைய அனுமதி மறுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக சபரிமலை கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

பெண்களை அனுமதித்தால் கோவிலை மூட பந்தளம் அரச குடும்பத்தினர் உத்தரவிட்டதாக தலைமை தந்திரி கூறியதால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கிடையில் மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணான ரஹானாவின் வருகை இந்துக்களிடையே கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.

இதையடுத்து,  இரண்டு பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டாம் என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 2 பெண்ளையும் திருப்ப அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து, கேரள அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன் கூறியபோது, சபரிமலை செல்லும்  பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர, போராட்ட எண்ண முடையவர்களை அனுமதிப்பதல்ல. போராட்ட உணர்வை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை அல்ல என்றும், இது பக்தர்களின் உணர்வை பாதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கேரள எதிர்க்கட்சி தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா, இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை திருப்தி இல்லை என்று கடுமையாக சாடினார்.

சபரிமலை  சுற்றுலாத் தலம் கிடையாது… அங்கு பக்தர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.  ஆனால், தங்கு தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் வன்முறை ஏற்படும் விதத்தில் உள்ளது…  நாங்கள்  அரசாங்கத்தில் இருந்திருந்தால் நிலைமை நன்றாக இருந்திருக்கும்..  நாங்கள் பக்தர்களிடம் பேசியிருப்போம் என்று கூறி உள்ளார்.