சபரிமலை விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக, கேரள மாநிலங்களிக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பரிமலை விவகாரம் தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படலாம் என்றும் உரிய த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 16ம் தேதி இந்தக் கடிதம் அனுப்ப்பப்ட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும்,  அசம்பாவித செயல்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்து அமைப்புகள் நிலக்கல் மற்றும் எருமேலி பகுதிகளில் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தக் கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளா தவிர தமிழ்நாடு, கர்நாடகத்திலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதாக இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆகவே மூன்று மாநிலங்களிலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடுக்கும்படி அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.