சபரிமலை விவகாரத்தில் பக்தர்களை வீதிக்கு இழுப்பது நல்லதல்ல! கேரள தேவசம்போர்டு அமைச்சர்

திருவனந்தபுரம்:

பரிமலை விவகாரத்தில் பக்தர்களை வீதிக்கு இழுப்பது நல்லதல்ல என்று  கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி யதை தொடர்ந்து, பிரச்சினை பூதாகரமானது. பல பெண்கள் கோவிலுக்கு வர முயற்சித்த நிலையில், அவர்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாநில அரசுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமச்சந்திரன் (கொல்லம்) இன்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்ய உள்ளார்.  அதில், 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை அனுமதிக்க தடை விதிக்க வகை செய்யும்  அநத் மசோதாவில்,  சபரிமலை விவகாரத்தில் 2018, செப்டம்பர் 1-ம் தேதிக்குள் முன்பிருந்த நிலை தொடரவேண்டும் என மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பாதுகாக்கப்பட வேணடும் என்றவர், மரபுகளை சட்டத்தால் பாதுகாக்க முடியும் என்றால், அது நல்லது என்று கூறியவர், பக்தர்களை வீதிக்கு இழுப்பது பொருத்தமானதல்ல என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், சபரிமலை விவகாரம்  தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றுமாறு நாங்கள் மத்திய அரசை கோரியிருந்தோம் என்று கூறியவர்,  ஒரு சட்டத்தை உருவாக்க  நேரம் தேவைப்பட்டால், ஒரு அரசாணை கொண்டு வந்து,  அதன் அடிப்படையில் அரசாங்கம் செயல்பட செய்யலாம்.

இவ்வறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.