சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு: மீண்டும் பதற்றத்தில் கேரளா… கமாண்டோ படை குவிப்பு

பம்பா:

ச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பரபரப்பையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், இன்று மாலை சபரிமலை கோவில் நடை பூஜைக்காக திறப்பட உள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், சபரி மலை பகுதியில் கமாண்டா படை காவல்துறையினர் உள்பட சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி ஐப்பசி மாத பூஜைக்கு சில பெண்கள்  சபரிமலை அய்யபப்பன் கோவிலுக்கு  வர முயற்சி செய்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர்.

இதன் காரணமாக பல இடங்களில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது  தீபாவளி மற்றும் ஸ்ரீசித்ர அட்ட திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று  மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.  நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

இந்த ஒரு நாள் பூஜைக்கும் சில பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.   கோவிலுக்கு வரும் பெண்களுக்கு கமாண்டா படை பாதுகாப்பு  அளிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், அசம்பாவித சம்பவம் ஏதேனும் நடந்தால் அவற்றை தடுக்கும் வகையிலும் சுமார் 2,000 போலீசார் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.  நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் கேரள போலீஸ் கமோன்டா படை வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.

சிசிடிவி கேமரா கண்காணிப்பு, போராட்டக்காரர்களை அடையாளம் காணும் கேமரா (Face detection camera) ஆகியவற்றுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சன்னிதானம் பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவிவருவதாக கூறப்படுகிறது.