சபரிமலையில் மண்டல காலம் நிறைவு

சபரிமலை:
பரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது. இனி மகரவிளக்கு சீசனுக்காக டிச.30 மாலை நடை திறக்கிறது.

கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல சீசன் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 41  நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று மண்டலபூஜை நடைபெற்றது. இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரம்மகலசத்தில் சந்தனம் நிறைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சந்தனகுடம் கோயிலை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. 11:20 மணிக்கு அபிசேகம் ஆரம்பமானது.

தொடர்ந்து தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தி தீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனைஅத்தாழ பூஜைக்கு பின்னர் இரவு 9:00 மணிக்கு
ஹரிவராசனம் பாடி அடைக்கப்பட்டது.

இனி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச. 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். மகரவிளக்கு சீசனில் ஆர்.டி.சி.பி.சி.ஆர். டெஸ்ட் நடத்தி நெகட்டீவ் சான்றிதழ் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்படுவதால் ஆர்டி லேப் டெஸ்ட் எக்ஸ்பிரஸ் நாட் டெஸ்ட் நடத்தி நெகட்டீவ் சான்றிதழும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.