Random image

சபரிமலையில் வரும் 16ம் தேதி நடை திறப்பு

திருவனந்தபுரம்:

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 16-ல் நடை திறக்கப்படுகிறது.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.

பக்தர்களுக்கு, திருநீறு பிரசாதம் வழங்கப்படும். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். 21-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை, களப பூஜை, சகஸ்ரகலசம் போன்ற பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.