பிந்து, பாத்திமா சபரிமலைக்கு செல்ல அனுமதி! உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி:

பரிமலைக்கு பெண்களை அனுமதிக்க கோரி பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமா போன்றோர் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்து மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள உத்தரவு தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள், பிந்து, பாத்திமா ஆகியோர் சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியதைத் தொடர்ந்து, அங்கு செல்ல பெண்கள் முயற்சிப்பதும், அவர்களை அய்யப்ப பக்தர்கள் விரட்டியடிப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டும் சில பெண் சமூக ஆர்வலர்கள் சபரிமலை செல்ல கேரளா வந்தபோது, அங்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமா போன்றோர் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அதையடுத்து, கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பாப்டே,  “கோயிலில் போலீசாரை நிறுத்து வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், இந்த வழக்கில், ஏற்கனவே உச்சநீதி மன்றம் வழங்கிய உத்தரவு தொடரும் என்று கூறினார்.

மேலும், வழக்கு தொடர்ந்த பிந்து, ரெஹைனா பாத்திமா ஆகியோர் சபரிமலை செல்ல காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று, சபரிமலையில் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும் என்று கூறியவர்,  இந்த  தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் அமர்வு விரைவில் விசாரிக்கும்” என்று அறிவித்துள்ளார்.