கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவிவில் பெயரை “சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில்” என மாற்றியுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

sabarimalai

இந்துக்களின் நம்பிக்கையின்படி இந்த ஸ்தலத்தில்தான் ஶ்ரீ ஐயப்ப சுவாமி தனது பூலோக வாழ்வை முடித்துவிட்டு தர்மசாஸ்தாவுடன் ஒன்றாக கலந்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும் திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் தர்ம சாஸ்தா என்ற பெயரில் ஏராளமான கோவில்கள் உள்ள நிலையில், தனிச்சிறப்பு வாய்ந்த சபரிமலையில் உள்ள இந்த ஐயப்பன் கோவிலுக்கு சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி திருவாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பழைய பெயர் உடனடியாக மாற்றப்பட்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. கோவிலின் மீதமுள்ள அனைத்து அதிகாரபூர்வ ஆவணங்களிலும் இந்த பெயர் மாற்றம் பதிவு செய்யப்படும் என்று தேவசம் போர்டின் செயலர் வி.எஸ்.ஜெயகுமார் தெரிவித்தார்.