சபரிமலை பதற்றம்: மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை எச்சரிக்கை

டில்லி:

பரிமலை விவகாரம் தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, 3 மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக சபரிமலை கோவிலுக்குள் இளம்பெண்கள் சிலர் வர முற்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இன்று காலை செய்தியாளர் கவிதா, சமூக செயற்பாட்டாளார் ரெஹைனா என்ற இஸ்லாமிய பெண்ணும் சன்னிதானத்திற்குள் காவல்துறையினர் உதவி யுடன் நுழைய முயற்சி செய்ததால் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.

இந்தநிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும்படி மூன்று மாநில தலைமைச் செயலாளர் களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.  அதில், சபரிமலையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்,  சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவையை முடக்கி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.