சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று சாத்தப்பட்டது

 

சபரிமலை

மகரவிளக்கு பூஜைகள் முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று சாத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.  பூஜைகள் முடிந்து டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.   அதன் பிறகு டிசம்பர் 30 ஆம் தேதி மகர விளக்குப் பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.

இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று மகர விளக்கு தரிசனம் நடைபெற்றது.  இதையொட்டி நாடெங்கும் இருந்து லட்சக்கணககன பக்தர்கள் வந்து ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்.    நேற்று மாலை மகரவிளக்கு பூஜைகள் முடிவடைந்தன.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை பாரம்பரிய பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன.   ஏராளமான பக்தர்கள் இன்று மகரவிளக்கு பூஜை இறுதி நாளில் தரிசனம் செய்தனர்.  சரண கோஷத்துடன் இன்று சபரிமலைக் கோவில் நடை சாத்தப்பட்டது.

கார்ட்டூன் கேலரி