சபரிமலை சர்ச்சை : ரெகனா பாத்திமா கொச்சியில் இருந்து இடமாற்றம்

கொச்சின்

பரிமலைக்கு சென்ற இளம்பெண் பொறியாளர் ரெகனா பாத்திமாவை கொச்சின் பி எஸ் என் எல் பணி இடமாற்றம் செய்துள்ளது.

கேரளாவை சேர்ந்த மாடலும் சமூக ஆர்வலருமான ரெகனா பாத்திமா கொச்சின் நகர பி எஸ் என் எல் அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் கேரளாவில் நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர். மற்றும் ஒரு படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். சுமார் 31 வயதாகும் இவர் சமீபத்தில் சபரிமலைக்கு சென்று திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்.

ரெகனா இந்துக்களின் நம்பிக்கையை புண் படுத்தியதாக கூரொ கேரள இஸ்லாமிய ஜமாத் இவரையும் இவர் குடும்பத்தையும் இஸ்லாம் மதத்தை விட்டு விலக்கி வைத்துள்ளது. இந்நிலையில் இவரை பி எஸ் என் எல் நிர்வாகம் கொச்சினில் இருந்து ரவிபுரம் என்னும் ஊருக்கு இடமாற்றம் செய்துள்ளது. அத்துடன் இவர் மீது உள்துறை விசாரணைக்கும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இடமாற்றம் இவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் ரெகனா பாத்திமா, “நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு கொச்சினில் இருந்து ரவிபுரத்துக்கு இட மாற்றம் கோர் விண்ணப்பித்திருந்தேன். தற்போது கடவுள் அருளால் எனக்கு அது கிடைத்துள்ளது. நான் இதை தண்டனை எனக் கருதவில்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.