சபரிமலை தீர்ப்பு : கேரள முதல்வரை சந்திக்க பந்தள அரசு குடும்பம் மறுப்பு

திருவனந்தபுரம்

பரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த முதல்வர் எடுத்து வரும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் நெடுநாட்களாக 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.     இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பளித்தது.  இதற்கு ஆதாரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மாநிலம் எங்கும் பெண்களும் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வருகின்றனர்.    போராட்டங்கள் வலுப்பெற்று வருவதால் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்ப்பை அமுல் படுத்த கேரள அரசு பெரிதும் முயன்று வருகிறது.   நாளை நடைபெற உள்ள இந்த பேச்சு வார்த்தையில் சபரிமலை கோவில் தந்திரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் ஐயப்பனை வளர்த்த பந்தள அரச குடும்பத்தினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  கேரள அரசு சீராய்வு மனு அளிக்கும் வரையில் பேச்சு வார்த்தையில் பங்கு கொள்ளப் போவதில்லை என பந்தள அரச குடும்பத்தினர் அறிவிப்பு செய்துள்ளனர்.   சபரிமலை கோவில் தந்திரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் கலந்துக் கொள்ள மறுத்துள்ளனர்.    அரசின் பேச்சு வார்த்தையில் இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.