சபரிமலை மண்டல பூஜை: 260 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவிப்பு

சென்னை:

கார்த்திகை மாத மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16ந்தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில்,  சபரிமலைக்கு 260 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டலபூஜைக்காக சுமார்  40 நாட்கள் கோவில்  நடை திறந்திருக்கும். இந்த நாட்களில்  கேரளா மட்டு மின்றி தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.

இதை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்,  சபரிமலைக்குபல சிறப்பு ரயில்களே ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையில் மொத்தம் 260 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, சென்னை – கொல்லம் தடத்தில் மட்டுமே 244 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட சிறப்பு ரயில்களில் பெரும்பாலும் ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்வே கோட்டங்கள் சார்பிலும் சிறப்பு ரயில்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தெற்கு மத்திய ரயில்வே சார்பில் 18 சிறப்பு ரயில்களும், கிழக்கு மண்டல ரயில்வே சார்பில் 26 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை – திரு வனந்தபுரம் (12697/12698) வாரந் திர விரைவு ரயில்கள் செங்கானூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் (தற்காலிக நிறுத்தம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

You may have missed