பரிமலை

பரிமலையில் பெரிய பாதையில் உள்ள கேந்திரங்களின் மகத்துவம் – மூன்றாம் பகுதி இதோ

சபரிமலையில்  பெரிய பாதையில் செல்லும் வழியில் உள்ள கேந்திரங்களைக் குறித்து நாம் இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.   அதன் அடுத்த பகுதி இதோ

கல்லிடும் குன்னு

கல் இடும்  குன்னு என்றால் கல்லை இடும் குன்று என்பது பொருளாகும்.   இது அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் ஆகும். அழுதா மலையை ஏறி முடித்த பின்னர் மேட்டுப் பகுதியில் கற்களை வீசி எரிகின்றனர்.  இது. நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான பங்காகத் தீமையை அழிக்க ஒரு முயற்சியாக கருதப்படுகிறது.  இந்த இடத்தில் ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷியை அவர் இங்கு வீசி அந்த உடலில் மீது ஒரு பாறையைத் தூக்கி எறிந்ததாகவும் ஒரு கதை உண்டு.

 

முந்தைய காலங்களில் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இங்குச் சிறப்பாகப் பூஜைகள் நடத்தி லீலாவதிக்கு ஆராதனை செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவும் நடப்பதில்லை

அழுதா மலை இறக்கம்.

கல்லிடும் குன்று முடிவுக்குப் பின் இறங்கும் மலை இறக்கமாகும்.   அழுதா மலையின் உச்சியில் உள்ள கல்லை போட்டு விட்டு இங்குப் பக்தர்கள் இறங்கி வருவார்கள்.    இது ஓரளவுக்குச் செங்குத்தான இறக்கம் என்பதால் இங்கு மலை இறங்குபவர்கள் மிகவும் கவனமுடன் இறங்க வேண்டும்.

அடுத்து வரும் பகுதிகளில் மேலும் கேந்திரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.