பரிமலை

பரிமலையில் தற்போது அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்,  இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற மாதம் தவிர வேறு எப்போதும் மாத பூஜைக்குப் பக்தர்களை அனுமதிக்கவில்லை.  சென்ற மாதம் சோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டனர்

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலம் காரணமாக தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.   வார நாட்களில் தினசரி 1000 பேரும் விடுமுறை நாட்களில் 2000 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர்.  இதற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் முடிவடைந்துள்ளது.

பக்தர்கள் குறைவான எண்ணிக்கையில் வருவதால் சபரிமலை கோவிலுக்கு வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.

அதன்படி இனி வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு விடுமுறை நாட்களில் 3000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.    இந்த தீர்மானத்தை தேவசம் போர்டு கேரள அரசுக்கு அனுப்பி வைத்து அதற்கு கேரள அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.