ஓண பூஜை : பக்தர்களுக்கு தடையால் வெறிச்சோடிக் கிடக்கும் சபரிமலை கோவில்

பரிமலை

நேற்று ஓண புஜைகளுக்காக திறக்கப்பட்ட சபரிமலை கோவில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.

கன மழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.   அனைத்து அணைகளும் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.    கடந்த 14 முதல் பம்பை ஆற்றின் வெள்ளத்தை ஒட்டி சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.   மழை தற்போது குறைந்தும் பம்பை வெள்ளம் குறையவில்லை.

பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்வதல் நிறை புத்தரிசி பூஜை, ஆவணி மாத பூஜை காலங்களில் பக்தர்கள் யாரும் வரவில்லை.    நீதிமன்றம் அடுத்த அறிவிப்பு வரும் வரை பக்தர்களை சபரிமலைக்கு அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.     நேற்று மாலை 5 மணி அளவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.

வழக்கமாக ஓண பூஜை சமயங்களில் சபரிமலையில் கூட்டம் அலை மோதும்.  ஆனால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சபரிமலை கோவில் வெறிச்சோடி உள்ளது.